'>

Tuesday, July 26, 2016

'கபாலி' ஆண்டைகளின் கதை முடிக்க வந்தவனா?

அண்ணே வணக்கம்ணே !
ஒரு படத்துக்கு ரெண்டு விமர்சனமான்னு டர்ராயிராதிங்க. சத்தியமா இது விமர்சனமில்லை . விமர்சனத்தை படிக்காது தப்பித்தவர்கள் இங்கு படிக்கலாம்.

டீசர் யுகத்துல இருந்தே அதோ அம்பேத்கர் ,இதோ ஒரு குறியீடு ,அதோ ஒரு அரசியல்னு பத்த வச்சுக்கிட்டே இருந்தாய்ங்க.
இந்த மாதிரி மேட்டர்ல எல்லாம் ஒரு பானை சோறு அண்ட் ஆல் தட் எல்லாம் உதவாது .பூனைக்குட்டி முழுசா வெளிய வரனும்.

ரஞ்சித் தலித் என்பதாலும் - கபாலியில் தலித்தியம் பேசப்பட்டதாகவும் பல நண்பர்கள் -முக்கியமாக திமுக அனுதாபிகள்  கபாலியை தூக்கிப்பிடித்தார்கள்.
நாம என்னமோ ஊருக்கெல்லாம் ஒரு வழி -ஒன்னரை கண்ணனுக்கு ஒரு வழிங்கறாப்ல படத்தை படமா பார்த்து கிளிச்சு தொங்க விட்டுட்டம்.

இயக்கியவர் தலித் - தயாரித்தவர் நான் பிராமின் -நடித்தவர் ரஜினி - படத்தை வாங்கியது யாரு?ஜாஸ் சினிமாஸ். இதை வாங்கின காசு யாரோடது?  மக்களோடது .

மக்களில் 52 சதவீதமா இருக்கிறது ஆரு? எஸ்.சி,எஸ்.டி,பி.சி,மைனாரிட்டிதானே .இவிகளுக்கு செல்ல வேண்டிய நல திட்டங்களையோ / வளர்ச்சி திட்டங்களையோ காயடிச்சு கொள்ளையடிச்ச காசு இது .

இந்த காசை போட்டு படத்தை வாங்கி எந்தெந்த வழியில சனத்தை கொள்ளையடிக்கலாம்னு ரூம் போட்டு ரோசிச்சு கொள்ளையடிச்சுட்டானுவ.
இந்த கொள்ளைக்கு துணை போனதுதான் ரஞ்சித்தோட சாதனை. இதுல மம்மி ரஜினி பேரனுக்காவ ஒரு ஸ்கூலையே த.செவுக்கு கூப்டு டைரிமில்க் சாக்லெட் கொடுத்து மகிழ்ந்திருக்காய்ங்க.

குசேலனுக்கு மிந்தி படங்கள்ள ரஜினி பேசின டயலாகை எல்லாம் ரஜினியே சொந்தமா எழுதி பேசினதா பொங்கின கும்பல்லாம் அடங்கிருச்சு. காரணம் குசேலன்ல ரஜினி பேசின வசனம்

இப்ப ரஞ்சித் என்னடா டிவி18 பேட்டியில எல்லாத்தையும் ரஜினியே வேண்டி விரும்பி ஏத்து பேசினதா அடிச்சு விட்டிருக்காரு (பாவம் சினிமாவ பத்தி தெரிஞ்ச அளவுக்கு -ரஜினிய தெரியல அவருக்கு )

இளையராசா ஏதோ கோவில் கோபுரத்துக்கு நிதி கொடுத்தாரு .ஆனால் மேடையில என்னாச்சு? அப்ப வருசம் என்ன?

அமெரிக்காவுல இருந்து வந்த ரஜினி உடனே தமிழகத்தின் ராஜகுரு சோ ராமசாமிக்கு ப்ரிவியூ போடறாரு . தயாரிப்பாளர் கூட இருக்காரு . ரஞ்சித்தை எங்கே? இது 2016.

கொய்யால இப்ப எவன் சாதி பார்க்கிறான்னு எவன்னா கேட்டா என்ன பண்ணனும்னு நீங்களே முடிவு பண்ணுங்க.

இதான்யா கபாலி ஆண்டைங்க கதைய முடிக்கிற லட்சணம் .என் வேண்டுகோள் படத்தை படமா பார்ப்பம் . படமா இருந்தா தூக்கி பிடிப்பம்.பப்படமா இருந்தா தூக்கி வீசுவம்.

இயக்குனர் தலித்ங்கறது  ஒரு விபத்து மாதிரி . சினிமா அப்படியில்ல .ப்ளான் பண்ணி  செய்யற விஷயம். எதையும் ப்ளான் பண்ணி செய்யனும் .ரஞ்சித் கோட்டை விட்டுட்டாரு .

ரஜினிய பாருங்க என்னமா ப்ளான் பண்ணி பண்றாரு ..ரஞ்சித் ரஜினி கிட்டே கத்துக்க வேண்டிய மேட்டர் எவ்வளவோ இருக்கு .
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித் !

No comments: