'>

Saturday, April 21, 2012

கொலைகாரனுக்கு கொடி பிடிக்கும் மீடியா


அண்ணே வணக்கம்ணே !
சூர்யா நடிச்சு வெளி வந்த ரத்த சரித்திரம் பார்த்தவுகளுக்கு விளக்கம் எதுவும் தேவைப்படாது. மத்தவுகளுக்காக சிறு விளக்கம்.

அனந்தப்பூர் மாவட்டம் தெ.தேசம் லீடர் பரிட்டால ரவீந்திரா. இவரை லோக்கல் ஆதிபத்யம்+ பழிவாங்கலுக்காவ ஒரு பார்ட்டி போட்டு தள்ளிருச்சு.உன்னை நான் வெட்ட என்னை நீ வெட்டன்னு நடந்த தொடர் சம்பவங்களில் ஒரு பாகமா சூரிங்கறவனை அந்தாளோட ஆளே ( பானு கிரண்) பின் சீட்ல இருந்து துப்பாக்கியால சுட்டு போட்டு தள்ளிட்டான்.

2011 ஜனவரி 3 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்த பிற்காடு ஆளு எஸ்கேப். நேத்திக்கு போலீஸ் புடிச்சிட்டாய்ங்க. இது தொடர்பா ப்ரஸ் மீட் நடக்குது.

மீடியாகாரவுக எல்லாம் ஆஜர். சிஐடி ஐஜி ப்ரஸ் மீட்ல வந்து உட்கார்ராரு. பேச ஆரம்பிக்கிறாரு.அப்பம் கொலை குற்றவாளியான பானுகிரணை ப்ரஸ் கான்ஃபிரன்ஸ் நடக்கிற அறைக்கு கூட்டி வராய்ங்க.

நம்ம மீடியா என்னா பண்ணுது.. 15 நாளா கார்ப்பரேஷன் குழாய்ல தண்ணி வராதப்ப வந்த தண்ணி லாரியை நோக்கி ஆணும்,பெண்ணுமா பிளாஸ்டிக் குடங்களோட பாயற மாதிரி வாசல் நோக்கி பாயுது.

எப்படியும் அவனை கான்ஃபிரன்ஸ் ஹால்ல ஆஜர் படுத்தப்போறாய்ங்க.ஆனால் இவிகளுக்கு அத்தனை துடிப்பு.

இதுவாச்சும் பரவால்லை. பானு கிரணை சிஐடி ஆஃபீஸ்ல வச்சு விஜாரிக்கிறாய்ங்க. அதை திருட்டுத்தனமா நீலப்படம் கணக்கா இருளோன்னு ஷூட் பண்ணி போட்டி போட்டுக்கிட்டு காட்டறாய்ங்க.

இந்த அழகுல பானு கிரண் போட்டு த்ள்ளினது ஏதோ தேசத்தலைவனைத்தாங்கற ரேஞ்சுல பானு போட்டுத்தள்ளின சூரியோட மனைவிகிட்டே பேட்டி வேற .அன்னைக்கு எத்தீனி சம்பவங்கள் நடந்திருந்தாலும் – எத்தனை நிருபர்கள் உசுரை கொடுத்து கவர் பண்ணி அனுப்பியிருந்தாலும் பெப்பே. எல்லா சானல்ஸ்லயும் இதே பீடை. இவனுவளை திருத்தவே முடியாதா? சரிங்ணா புத்தாண்டு பலன்ல இன்னைக்கு துலா ராசிக்கான பலனை பார்ப்போம்.Read More

No comments: