'>

Wednesday, March 7, 2012

வலைப்பூக்களுக்கு பிரத்யேக ஹெடர் இமேஜ் :இலவசம்





அண்ணே வணக்கம்ணே !

என்னதான் நம்ம லக்னத்துல குரு உச்சமா இருந்தாலும் - நாம பெரி மன்சங்கற ஃபீலிங் இருந்தாலும் - சில்ல்றை தகராறுகளை எல்லாம் விட்டு ஒதுங்கியே இருக்கனுங்கற எண்ணம் இருந்தாலும் லக்னம் கடகம்ங்கறதால அல்லாரோடவும் இன்டராக்ட் ஆகனுங்கற எண்ணமும் அப்பப்போ வெரும்.

ஒருத்தரை எதிரியாக்கிக்கனும்னா மொதல்ல அவரோட நட்பு வச்சுக்கனுமாம். சரீ..இ..இ மேட்டர் விஷயமா தொடர்பு வச்சுக்கிட்டாத்தானே முட்டல் மோதல் எல்லாம். மாத்தி யோசி முருகேசான்னு நமக்கு நாமே சொல்லிக்கிட்டு ரோசிச்சதுல இந்த ஐடியா வந்தது.

என் மகள் ( இது ஸ்தூலமா தான் - சூட்சுமமா ரோசிச்சு பார்த்தா நம்ம பைத்தாரத்தனங்களையெல்லாம் சகிச்சுக்கிட்டு கோ ஆர்டினேட் பண்றத வச்சு பார்த்தா அம்மான்னு தேன் சொல்லனும்) அடோப் ஃபோட்டோஷாப்ல கொஞ்சம் விளையாடுவாள்.

சில வலைப்பூக்களோட ஹெடர் இமேஜ் தூளா இருந்தாலும் நமக்கு பிடிச்ச சில வலைப்பூக்கள்ள ஹெடர் இமேஜ் சுமார் ரகம் தான்.

அதனால நமக்கு பிடிச்ச வலைப்பூக்களுக்கு பொருத்தமா ஹெடர் இமேஜ் டிசைன் பண்ணி நம்ம சைட்/ப்ளாக்ல போட்டா என்னன்னு ஒரு ரோசனை வந்தது.

மொதல் சாய்ஸ் தமிழோவியா. இவிகளுக்கு டிசைன் பண்ணி - மெயில்ல அனுப்பி மாமாங்கமானாலும் அவிக உபயோகிச்சுக்கலை.சமீபத்துல ஃபேஸ் புக் வழியா கூட முயற்சி பண்ணியாச்சு.

இப்பம் நம்ம ரெண்டாவது சாய்ஸ் நம்ம சுப்பையா சார். அவரோட வலைப்பூவோட பேராலயோ என்னமோ தெரியலை அவரை பார்த்தாலே வாத்யாருங்கற ஃபீலிங் தான் வருது அதனால புதுமையா
( ஐ மீன் கொனஷ்டையா ) ஏதும் பண்ணாம ஒரு டிசைன் இங்கன வச்சிருக்கோம்.



வாத்யாரின் நலம் விரும்பிகள் இந்த இமேஜை சிபாரிசுபண்ணா நல்லது. இன்னொரு மேட்டர் அன்னாரின் தபால் விலாசம் தெரியலை. ஆருனா நமக்கு மெயில் பண்ணிங்கனா நாம சமீபத்துல வெளியிட்ட "ஜோதிடம் 360" நூலை அவருக்கு அனுப்பலாம்.

குத்தம் குறை எதுனா இருந்தா ( இருந்தா என்ன.. நிச்சயமா இருக்கும்) அவரு சொல்வாரு. கு.ப அடுத்த பதிப்புலயாவது ரெக்டிஃபை பண்ணலாம்.

தலைப்பில் எனக்குப்பிடித்த என்ற வரிகளை சேர்த்துக்கங்க ப்ளீஸ்..

No comments: