'>

Tuesday, March 20, 2012

ஜூன் 21க்கு மேல் அணு உலையில் கசிவு


அண்ணே வணக்கம்ணே !
ச்சொம்மா திகிலை கிளப்ப இப்படி ஒரு தலைப்பை வைக்கல்லை. சனி துலாத்துல கீறாரு. செவ்வாய் சிம்மத்துல. ரெண்டு பேரும் வந்து மீட் பண்ணிக்க எம்மாம் நாளாயிருங்கறிங்க. இவிக ரெண்டு பேரும் பா.ஜ.க காங்கிரஸ் மாதிரி -சேரவே கூடாது -சேர்ந்தா ஆப்புதேன்னு அல்லாருக்கும் தெரியும். வர்ர ஜூன் மாசம் 21 ஆம் தேதி செவ் பொடி நடையா வந்து துலாம்ல இருக்கிற சனியோட சேரப்போறாரு.

சுமார் 45 நாள் அங்கன சனியோட கூடி கும்மியடிக்கப்போறாரு. நம்ம நாட்டோட ஜன்ம ராசியான ரிஷபத்துக்கு அது 6 ஆவது ராசி. கூடிய சீக்கிரம் இன்னம் டீப்பா ஆராய்ச்சி பண்ணி அணு உலை கசிவு எப்பம் நடக்கும்னு ஒரு நாலைஞ்சு முகூர்த்தங்களை சொல்றேங்ணா..

நேற்றைய பதிவை படிச்சவுக இன்னாபா இது நம்மாளுக்கு திடீர்னு சமூக அக்கறை வந்துருச்சா கூடங்குளம் அணுமின் உலை விவகாரத்தை இப்படி போட்டு கிழிச்சிருக்காரேன்னு வாய் விட்டு கூட முனகியிருப்பிங்க.

நம்முது கடகலக்னமாச்சா ..ஒரு பாதை லேசா பழக்கப்பட்டு போச்சுன்னா வண்டி அதே தடத்தை பிடிச்சுக்கிட்டு ஓடும். ஆனால் ராசி சிம்மமாச்சா "கொய்யால .. நீ யாரு? இன்னா பண்ணிக்கிட்டிருக்கே"ன்னு ஒரு அசரீரி கேட்கும் .படக்குன்னு முழிச்சுக்குவம்.

இந்த அணு உலை எதிர்ப்பு மேட்டர்ல இடையில ஒரு தாட்டி டச் பண்ணதோட சரி. நாம கண்டுக்கவே இல்லை. மேட்டர் இன்னாடான்னா இந்த மேரி கதையெல்லாம் எந்த ரூட்ல ஓடும் எங்கன பிடிச்சு உடைச்சு திருப்புவாய்ங்கன்னு நமக்கு தெரியும்.

அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலீவரு உதயகுமாரை கூட "பொட்டி வாங்கிட்டாரு"ன்னு சாட்சாத் மத்திய மந்திரி,பிரதம மந்திரியே போட்டு உடைச்சாய்ங்க.

அணு உலை கூடாதுன்னு போராட்டம் பண்ண அவர் பொட்டி வாங்கினதாவே கூட இருக்கட்டும். தாளி.. வாழ்ந்து கெட்ட ரஷ்யாவோட - ஒப்பந்தம் போட்டு - அவிகளுக்கு லிஃப்ட் கொடுக்க பொட்டி வாங்கினவுக ஆரு? அந்த மேட்டரும் வெளிய வரனும்ல.

அம்மா மேட்டரையே எடுத்துக்கங்க காரியமானதும் கதவை சாத்தடிம்பாய்ங்க. அம்மா கதவை திறந்துவிட்டுட்டாய்ங்க. இதுக்கிடையில என்னெல்லாம் பேரம் நடந்தது? எங்கெங்கே அஜீஸ்மென்ட் நடந்தது . இதுல அம்மா விட்டுக்கொடுத்தது என்ன? அய்யா போட்டுவிட்டது என்ன? இந்த மேட்டரும் வெளியவரனும்ல. ஒரு வேளை பெங்களூர் ஜட்ஜுக்கு டபுள் ப்ரமோசன் போட்டு கழட்டி விட்டுருவாய்ங்களோ?

அணு உலை எதிர்ப்பு மேட்டர்ல நாம பெருசா ரெஸ்பான்டே ஆகலை.ஏன்னா கதை இப்படித்தான் முடியும்னு ஒரு ஹஞ்ச்.

இதை இங்கே எழுதியும் இருக்கேன்.சந்தேகமா இருந்தா பார்த்துட்டு வாங்க.

நம்மை போல சொகுசான பேர்வழிகளுக்கு குறிப்பிட்ட பாராவை கட் பேஸ்ட் பண்றேன்.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும்.

நம்ம வீட்ல அம்மாவுக்கு யூட்ரஸ் கான்ஸர்,அண்ணனுக்கு ப்ளட் கான்சர் , மாமனாருக்கு த்ரோட் கான்சர் ( அல்லாரும் டிக்கெட் போட்டாச்சு. அணு உலை நம்ம பக்கத்து வீட்ல வந்தாதான் அதனோட விபரீதம் புரியனும்னுல்ல.

அணு உலை வரலின்னா இந்திய கான்சர் நோயாளிகளுக்கெல்லாம் கான்சர் குணமாயிருமான்னு கேட்டா ஆகாதுதான்.ஆனால் வேலியோரமா போறத எடுத்து வேட்டிக்குள்ள விட்டுக்குவானேன்.

மரியாதைப்பட்டவுகல்லாம் சொல்றாய்ங்க. உலகமெல்லாம் உள்ளதை மூடிக்கிட்டிருக்காய்ங்கன்னு காதுல விழுந்தாதானே..

என்னமோ பாஸ் ! நாலு பேருக்கானது நமக்கும். நமக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு. கு.பட்சம் தமிழ் நாட்டு ஊர்காவலரை கூட நம்மால சமாளிக்க முடியாது. உலை திறக்கப்போறது நிச்சயம். சனம் உசுருக்கு உலை வைக்கப்போறது நிச்சயம்.

தடுக்க முடியாததை - தவிர்க்க முடியாததை எஞ்ஜாய் பண்ணுவம். வெடிக்குமா? வெடிக்காதான்னு பெட்டிங் நடத்தலாம்.

இப்பம் அணு உலை வேலை செய்ய ஆரம்பிச்சுட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடறாய்ங்களே .. இதுக்கும் நாம சொன்னதுக்கும் என்னத்த பெரிய வித்யாசம்?

நாளைக்கு ஆந்திர சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்குது. ஏழுக்கு ஏழும் காங்கிரஸுக்கு சங்குதான்.

ஜகன் மோகன் ரெட்டியை அரெஸ்ட் பண்ணியே உடுவம்னு டகுலு காட்டிக்கினு கீறானுவ. அவிங்க நைனா குறைஞ்ச விலைக்கு அரசு நிலங்களை தனியாருக்கு ஒதுக்கினதாவும் அதுக்கு கைம்மாறா அந்த கம்பெனிங்க ஜகன் கம்பெனிகள்ள முதலீடு செய்ததாவும் கேஸு.

அரசு நிலங்களை தனியாருக்கு ஒதுக்கி "தனியார் பங்கேற்பை" ஆரம்பிச்சதே சந்திர பாபுதான். 1995 லருந்து விஜாரிச்சா எத்தீனி சி.எம், எத்தீனி ஃபைனான்ஸ் மினிஸ்டர், எத்தீனி செக்ரட்டரி அல்லாரும் முடிஞ்ச பிற்காடுதேன் ஒய்.எஸ்.ஆர்

ஒய்.எஸ்.ஆர் மந்திரிசபையில இருந்த பார்ட்டிங்கல்லாம் இப்பயும் சோனியா பக்கம் தேன் இருக்காய்ங்க. அல்லா விக்கெட்டும் விழுந்து முடிஞ்ச பிற்காடுதேன் ஜகனை டச் பண்ணவே முடியும்.

கோர்ட்டு வேற ஒய்.எஸ் மந்திரி சபையில இருந்த 6 மந்திரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. தப்பித்தவறி ஜகனை தூக்கி உள்ளே போட்டா "ஹய்யா ஜாலி.. 6 மாசத்துல எலீக்சன் வரும். நம்ம லோக்கல் பேப்பருக்கு விளம்பரவேட்டைதேன் -மேலும் நம்ம சமூக கடமையை ஆற்ற ஜகன் கட்சிக்கு பிரசாரம் பண்ண போயிரலாம்.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம் காங்கிரஸுங்கற கட்சி போயி சேர்ந்தாதான் சனத்துக்கு உசுராச்சும் மிஞ்சும்.

ங்கொக்கா மக்கா மெஜாரிட்டி இல்லாமயே இந்த அளவுக்கு நாசம் பண்றாய்ங்களே.. தப்பி த்தவறி மெஜாரிட்டி கிடைச்சிருந்தா இன்னா கதி ?

ஆட்டுக்கு வாலை அளந்து தான்ய்யா வச்சிருக்கான் கடவுளு. God is Great !

போங்கடாங்கொய்யால நீங்களும் உங்க ஆட்சியும் மசுரும்..



No comments: