'>

Tuesday, February 21, 2012

நிலையற்ற தன்மையை குறைக்க


அண்ணே வணக்கம்ணே !
திங்கள் மாலை கூரியர்ல அனுப்ப முடிஞ்சவுகளுக்கெல்லாம் அனுப்பியாச்சு. விடுபட்டவுக, ஆர்.பிலதான் அனுப்பனுங்கற டிஸ்டன்ஸ்ல உள்ளவுகளுக்கு நேத்திக்கு அனுப்பிட்டம். ( ஜோதிடம் 360 புஸ்தவத்தை சொன்னேன்).
எடைக்கு போட்டா குவார்ட்டருக்கு கூட தேறாத அளவு பிரதிகள்தான் கைவசமிருக்கு. முந்திக்கங்க.அப்பாறம் நம்மை மறுபடி ரீ ப்ரிண்டுக்கு இழுத்துவிட்டுராதிங்க. ஜனவரி 30 க்கு மிந்தி அனுபவஜோதிடம் சைட்டு 25,000 க்குள்ள இருந்தது. இப்பம் பார்த்தா லட்சத்து நாப்பதாயிரம் ( ரேங்கை சொன்னேன் - இண்டியா ரேஞ்சுல) அதனால ரீ ப்ரிண்டுக்கெல்லாம் இன்னம் ஒரு வருசமாச்சும் பிடிக்கும்.ஆமா சொல்ட்டன்.
நேத்து மனித வாழ்விலான நிலையற்ற தன்மைக்கு சோதிட காரணத்தை (சந்திரன்) சொல்லியிருந்தேன். படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்காட்டாலும் லட்டு கணக்கா கேட்ச் பண்ணிட்டிங்க போல. ( புரியாட்டாலும் கமெண்ட் போட டைமில்லாதவுகளுக்காக மீள் பதிவு கணக்கா எதுல இன்ஸ்டெபிளிட்டிங்கற பத்தியை மறுபடி போட்டு - அது எந்த ராசி/லக்னத்துக்குங்கறதையும் சொல்லி - அதுக்கு பரிகாரத்தையும் தந்திருக்கன். தூள் பண்ணுங்க..
கடகராசி /லக்ன காரவுகளுக்கு:
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை இருக்கு. அவ்வப்போது மூட் அவுட்டாயிர்ரம். எளிதில் எரிச்சல்,கோபம் வருது..சில சமயம் க்ஷண நேரத்தில் முடிவெடுத்து ஆண்டு கணக்கில் வேதனை படறோம். ( காதல்?) நம்ம பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கு.
பி.கு: இது மீனராசிக்காரவுகளுக்கும் டச் ஆறாப்ல இருக்கும் .ஏன்னா சந்திரன் இவிகளுக்கு பஞ்சமாதிபதி(புத்திஸ்தானம்)

பரிகாரம்:
கடற்கரை ,ஆத்தங்கரை,குளத்தங்கரை ( நெல்ல தண்ணி இருக்கனுங்கோ) , வீட்டுக்கு நைருதில மேல் நிலை குடி நீர்த்தேக்க தொட்டின்னு இருக்கிற வீட்ல வசிக்கப்பாருங்க. மதிப்புள்ள சின்ன வேலைகளையே எடுத்துக்கங்க. (வைரம் மாதிரி ) பெரிய வேலையா இருந்தாலும் ( இரும்பு பாளம்) அதை பார்ட் பார்ட்டா பிரிச்சு டெட் லைன் வைக்காம செய்துட்டு வாங்க.
மனசுக்கு பிடிக்காத வேலைய செய்யவே செய்யாதிங்க. பகை,புகை ,தூசு ,மன அழுத்தம் கூடவே கூடாது. விட்டா மன நோயாளியாயிருவிங்க. எது நடந்தாலும் இதுவும் ரெண்டே கால் நாளைக்குத்தானேன்னு ஃப்ரீயா உடுங்க..

மிதுன ராசி/லக்னம்:
சில நேரம் காசு பணத்தை வீணாக்கறோம். சில நேரம் கால் காசுக்கு லாட்டரி அடிக்கிறோம். சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருக்கிறோம். சில நேரம் குடும்பம்னா அது என் குடும்பம் தான்னு காலரை தூக்கிவிட்டுக்கறோம். சில சமயம் " நான் எங்கயாவது ஒழியறேன்னு" தெருமுனை பெட்டிக்கடையில சிகரட் குடிக்கிறோம்.

பரிகாரம்:
பர்ஸ்.கேஷ் பேக் நீல நிறத்துல டால்ஃபின் ,மீன் இத்யாதி படம் போட்டதா இருந்தா ஓகே. நேச்சர் க்யூர்ல வாட்டர் தெரஃபி பத்தி நிறைய படிச்சு நிறைய பேசுங்க. நீல நிற கூலிங் க்ளாஸ் போடுங்க. டிட் பிட்ஸ் இத்யாதி பழக்கமிருந்தா நீல நிறத்தை யூஸ் பண்ணுங்க.

ரிஷபராசி/லக்னம்:
சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்குது. திடீர் பயணங்கள் மேற்கொள்ளவேண்டி வருது.
பரிகாரம்:
கிட்டத்துல அருவி , அணை இருந்தா வாரம் ஒரு தாட்டி பிக்னிக் மாதிரி போய்வாங்க ( காஞ்சு கிடக்கிறப்ப வேணா) ப்ரதர் சிஸ்டர் ஆருனா இருந்தா அவிகளோட வாட்டர் கேன் பில்லை நீங்க செட்டில் பண்ணுங்க
அருவி,கடல் ஓசையை ரிங் டோனா வச்சுக்கங்க.

மேஷ ராசி/ லக்னம்:

சில சமயம் அம்மான்னா அம்மாதான். மத்த சொந்தமெல்லாம் சொம்மான்னு சொக்கிப்போயிர்ரம். அவிக உதவாக்கரை தம்பிக்காகவோ , திமிர் பிடிச்ச தங்கைக்காகவோ வக்காலத்து வாங்கும்போது செமை கடுப்பாயிர்ரம்.

பரிகாரம்:
அம்மாவுக்கு நீல நிற புடவை /நைட்டி வாங்கி கொடுங்க.அதுல கடல் காட்சி ப்ரிண்ட் ஆகியிருந்தா ஸ்ரேஷ்டம்.

அம்மாவுக்கு தண்ணி மேட்டர்ல ஹெல்ப் பண்ணுங்க. தோட்டம் கீட்டம் போட்டு நீர்பாய்ச்சுங்க (அவிக டேஸ்டுதேன் முக்கியம்)


சொந்த வீடு கட்டற வரை தாளி இந்த வீட்லயே இருந்துரனும்னு நினைக்கிறோம்.மறுமாசமே சட்டியை தூக்க வேண்டி வந்துருது. உஸ் ..அப்பாடா இனி வண்டியை பத்தி கவலையில்லைன்னு நினைக்கிறோம். மறுவாரமே திருடு போயிருது .அல்லது மூட்டையா கட்டி கொண்டுவரோம்.

பரிகாரம்:
வீட்டுல அக்வேரியம், வீட்டு ஹால் சுவற்றில் அருவி ,கடல் காட்சி போஸ்டர் வைங்க. ஊஞ்சல் மாட்டுங்க. ஈசான்ய மூலையில செயற்கை ஃபவுண்டென் ( மீனியேச்சர்) வைங்க.

வண்டியோட நிறம் நீலமா இருந்தா ( சீ ப்ளூ) நல்லது. ஸ்டிக்கரிங் பண்றப்ப கடல் சமாசாரங்களை போடுங்க

மீன ராசி /லக்னம்:

நம்ம மூளையில பாதி சாணக்யன் -பாதி சகுனின்னு பீத்திக்கறோம். பவரை ஆஃப் பண்ணாமயே ஸ்விட்ச் பாக்ஸ்ல கை விட்டு அல்வா வாங்கறோம்.

பரிகாரம்:
அருவி,கடல் காட்சிகளை கற்பனை செய்ங்க. கன்யாகுமாரி அம்மனை தியானம் பண்ணுங்க

என் பையன் ஜெம் சார்.. னுட்டு அலட்டறோம். அவன் டீச்சரம்மாவை கத்தியால குத்திட்டான்னு தெரிஞ்சு சரிஞ்சு விழறோம்.

பரிகாரம்:
பசங்களுக்கு நீந்த கத்துக்கொடுங்க.

கும்ப ராசி/லக்னம்:

சில சமயம் நான் அஜாத சத்ரு.. எனக்கு விரோதியே கிடையாதுங்கறோம். கடனா.. மூச் ! கடன் உடன் பகை ன்னு வசனம் விடறோம். இன்னை வரைக்கும் நமக்கு ஜூரம் தலைவலி கூட வந்ததில்லைங்கறோம். அடுத்த வாரமே சத்ரு -ரோக -ருண பீடைகள் ரவுண்டு கட்டி அடிக்குது.

பரிகாரம்:
ஒவ்வொரு நாளும் முதல் செலவை கடன் வாங்கி செய்ங்க. பதிவுகளை படிச்சுட்டு ச்சொம்மா போகாம கிளிச்சு கமெண்ட் போடுங்க (சொந்த பேர்ல) கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போயி ஏழை நோயாளிகளுக்காக பிரார்த்தனை பண்ணுங்க. தேவையே இல்லின்னாலும் லம்பா ஒரு அமவுண்டை வங்கில கடனா வாங்கிருங்க.


மகர ராசி/லக்னம்:

சில சமயம் கடவுள் எந்த விஷயத்துல எனக்கு ஆப்படிச்சிருந்தாலும் பொஞ்சாதி மேட்டர்ல தூள் பண்ணிட்டாரு. நம்ம பை. தனங்களுக்கு என்னைக்கோ ஓடிப்போயிருக்கனும்னு க்டவுளுக்கு நன்றி சொல்றோம்.

அடுத்த வாரமே கிரைம் நாவல் கணக்கா பெண்டாட்டியை போட்டு தள்ளிட்டா என்னன்னு ரோசிக்கறோம்.

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக அம்மாவுக்கு என்ன செய்யனும்னு சொல்லியிருக்கமோ அதை நீங்க உங்க மனைவிக்கு செய்ங்க

தனுசு ராசி/லக்னம்:

இன்னும் ஒரு பத்துவருசம் வாத்யாரே .. பையனுக்கு வேலை கிடைச்சு - பெண்ணுக்கு கண்ணாலம் பண்ணி அனுப்பிட்டன்னனா காசி ராமேஸ்வரம்னு சுத்தவேண்டியதுதான்னு டிக்ளேர் பண்றோம். தூக்கத்துலயே டிக்கெட் போட்டுர்ரம்.

பரிகாரம்:
தண்ணி மேட்டர்ல ஸ்ட்ரெய்ன் பண்ணுங்க. ஓவர் ஹெட் டேங்கை/ Sump ஐ கழுவி விடறது ,கை பம்புல தண்ணி அடிக்கிறது . தெருக்குழாய்ல தண்ணி வரலின்னா கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு மனு அனுப்பறது.

விருச்சிக ராசி/லக்னம்:

இதே மாதிரி த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்,

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக அவிக அம்மா மேட்டர்ல என்ன பண்ணனும்னு சொல்லியிருக்கமோ அதை நீங்க உங்க அப்பா மேட்டர்ல செய்ங்க

துலா ராசி/லக்னம்:
செய்தொழில் ,வியாபாரம், உத்யோகத்துல இன்ஸ்டெபிலிட்டி

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக வீடு மேட்டர்ல என்ன செய்யனும்னு சொல்லியிருக்கமோ அதை உங்க ஆஃபீஸ்ல /தொழிலகத்துல /உங்க சீட்ல செய்ங்க (முடிஞ்சதை/மேனேஜ்மென்ட் அனுமதிக்க கூடியதை மட்டும்)

கன்னி ராசி லக்னம்:

மூத்த சகோதர/சகோதிரி,லாபம் கருதிய செயல்களில் அன் சர்ட்டெனிட்டி

பரிகாரம்:
மேஷ ராசிக்காரவுக அவிக அம்மா மேட்டர்ல என்ன பண்ணனும்னு சொல்லியிருக்கமோ அதை நீங்க உங்க எல்டர் ப்ரதர்,சிஸ்டர் மேட்டர்ல செய்ங்க. ஒரு வேளை அவிக இல்லின்னா லாபம் கருதி செயல்படற சமயம் வீட்லயே ஒரு லட்சுமி/சரஸ்வதி சிலை ( உங்க கட்டை விரல் உயரம் தான் இருக்கனும்) வச்சு ஜலாபிஷேகம் பண்ணிட்டு போங்க. ( திரவ ரூபத்துல உள்ள - மங்களகரமான எதையும் உபயோகிக்கலாம் உ.ம் பால் தயிர் பன்னீர்)


சிம்ம ராசி/லக்னம்
தூக்க‌ம்,செக்ஸ் எல்லாத்துலயும் ஒரு வித இன்ஸ்டெபிலிட்டி,அன்செர்ட்டனிட்டி,அப் அண்ட் டவுன்ஸ், Anxious conditions இருக்கும்.

பரிகாரம்:
வாட்டர் பெட்,பில்லோ யூஸ் பண்ணுங்க. அ பெட் ஸ்ப்ரெட்,பில்லோ கவருக்கு நீல நிற /கடல் காட்சி பொறித்த க்ளாத்தை யூஸ் பண்ணுங்க. பெட் ரூம்ல மேற்படி நிறம் ,காட்சி உள்ள போஸ்டர் வைங்க.


எச்சரிக்கை:

ஜாதகத்துல சந்திர பலம் இருந்தா - யு பி எஸ்+ஸ்டெபிலைசரோட - பவர்ல வேலை செய்ற மாதிரி.

பவர் போனாலும் ( ஐ மீன் கோசாரத்துல சந்திர பலம் இல்லாத நாளிலும்) பேக் அப் கிடைக்கும்.

இருந்தாலும் நிலைமை சில நேரம் மோசமாகும். அப்படி மோசமாறச்ச மட்டும் மேற்படி பரிகாரங்களை உபயோகிங்க. ஒர்க் அவுட்டுதேன்.

ஜாதகத்துல சந்திரன் கெட்டிருந்தா டைரக்ட் பவர்ல வேலை செய்ற மாதிரி. பவர் ஃப்ளக்சுவேஷன் கம்ப்யூட்டரை பாதிக்கிறாப்ல ( டிம் அண்ட் டிப் அடிக்கிறது - ரீ ஸ்டார்ட் ஆயிர்ரது) சந்திரனோட நிலை ரெம்பவே பாதிக்கும்

நீங்க தேன் மேற்படி பரிகாரங்களை கட்டாயம் செய்யனும்.

2 comments:

vimal said...

ஐயா,

அருமையான பதிப்பு. நான் ரிஷப ராசி/கும்ப லக்னம்.ரோகினி நட்சரம், சந்திரன் 4மிடம்

ராசிப்படி பரிகாரம்:
*****************
1.அருவி , அணை பிக்னிக் :

- நான் சென்னைவாசி கடலை ரசிப்பது பொருந்துமா ?

2. ப்ரதர், சிஸ்டர் வாட்டர் கேன் பில் செட்டில் பண்ணுவது :

- ஒரு தம்பி சொந்த ஊரில் தாய், தந்தையாருடன் வசிக்கிறார். நான் இங்கு தனிமைல் ( என் தனிமை தங்கள் ஜாதக கணீப்பு படி தனிமையை நான் ரசிக்க வேண்டும்.)

3 கடல் ஓசை ரிங்ன்:

நீச்சயம் மாற்றுவேன்.

லக்கனபடி பரிகாரம்:
*******************************
தின செலவை உறவினரிடம் வாங்கலாமா அல்லது நண்பரிடம் வாங்கலாமா எது சிறந்தது?

sankar_raka said...

மிக உபயோகமுள்ள குறிப்புக்கள் அய்யா. எனது ராசி விருச்சிகம், அப்பா இல்லை, நான் எந்த விதத்தில் தங்கள் குறிப்புகளை பயன் படுத்தி கொள்வது , நன்றிகள் பல தங்கள் பதிலுக்கு.
உண்மையுள்ள, சங்கர் ராமசாமி - சென்னை.